Monday, 11 June 2018

திருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018 நாள் : 27.06.2018

 திருநெல்வேலி அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயில் "ஆனி பெருந்திருவிழா-2018" (01.06.18- அருள்மிகு விநாயகர் பெருமானுக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா 19.06.18 கொடியேற்றத்துடன் ஆரம்பம்
திருவிழா நிகழ்ச்சிகள்:

நாள் : 19.06.18: 
காலை:- திருவிழா  கொடியேற்றம் பெரிய தங்கக்கொடிமரம் மற்றும் அஷ்டதிக்கு கொடியேற்றம். சுவாமி, அம்பாள் இருவரும் தங்க பூங்கோவில் சப்பரத்தில் காட்சி.

இரவு:- பஞ்சமூர்த்திகள் தீபாராதனை மற்றும் வீதி உலா. சுவாமி, அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளல்.

நாள் : 20.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில் பவனி

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் - தங்கக் கமல வாகனம். 

நாள் : 21.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி - வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் - தங்கக் கமல வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - தங்க பூத வாகனம், அம்பாள் - வெள்ளி சிம்ம வாகனம்.
நாள் : 22.06.18
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை, 63-நாயன்மார்களுடன் வீதி உலா.
சுவாமி, அம்பாள் - வெள்ளி விருஷப வாகனம்.

நாள் : 23.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.
சுவாமி, அம்பாள் - வெள்ளி விருஷப வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி, அம்பாள் - இந்திர விமானம். சுவாமி அம்பாள் ஊடல்.

நாள் : 24.06.18:

காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.சுவாமி, அம்பாள் - வெள்ளிச்சப்பரம்,எம்பிரான் திருஞான சம்பந்தர் தங்கப்பல்லாக்கில் எழுந்தருளல். ஞானப்பால் திருவிழா.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி, அம்பாள் - வெள்ளிச்சப்பரம்

நாள் : 25.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி தந்தப்பல்லாக்கிலும், அம்பாள் முத்துப் பல்லக்கிலும் எழுந்தருளல். அன்னை காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள்- வெள்ளி காமதேனு வாகனம். தாமிரசபை அருள்மிகு நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி திருக்கோலம். 

நாள் : 26.06.18
அதிகாலை:- அருள்மிகு நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் திருக்கோவில் உட்பிரகார உலா.

காலை: தாமிரசபை அருள்மிகு நடராஜப் பெருமான் பச்சை சாத்தி கோலத்தில் ரத வீதி உலா.

பிற்பகல்: வெள்ளி வெட்டுங்குதிரையில் முருகர் வேணுவனகுமாரர் கோவில் சென்று பரிவேட்டை. சுவாமி அம்பாள் உள்வீதி உலா.

மாலை:- ஸ்ரீ கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

பின்னிரவு:- சுவாமி - தங்க கைலாய பர்வதம், அம்பாள் - தங்க கிளி வாகனம் எழுந்தருளி தேர் கடாட்சம். விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்தல். 

நாள் : 27.06.18:
காலை:- தேரோட்டம்
சுவாமி தேர் வடம் பிடித்தல், அம்பாள் தேர் வடம் பிடித்தல்.

மாலை:- சுவாமி அம்பாள் தேர்கள் நிலையம் சேர்ந்ததும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தல். சுவாமி அம்பாள் பல்லாக்கில் சப்தாவர்ணம், தேர் தடம் பார்த்தல்.-

28.06.18
காலை:- சுவாமி அம்பாள் சப்தாவர்ண பல்லாக்கு. பின்னர் தீர்த்தவாரி.
இரவு: சோமாஸ்கந்தர் உள்வீதி பவனி, கொடியிறக்கம்.